டிறோன் கமராக்கள், ஆளில்லா விமானங்களை பறக்கவிட தடை..! உடனடியாக அமுல்படுத்தியது அரசு..
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடா்ந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆளில்லா டிறோன் கமராக்கள் பறப்பதற்கு அரசு தடைவிதித்துள்ளது.
சிவில் விமான சேவை அதிகார சபை இந்த அறிவுறுத்தலை இன்று வியாழக்கிழமை விடுத்துள்ளது. இந்த நிலையில்,
இலங்கையில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் உடன் நடைமுறைக்குவரும் வகையில் நீக்கப்பட்டுள்ளாதாவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை ஆளில்லா விமானங்கள் பறக்கவிடுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு சிவில் விமான சேவை அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் கடந்த 21ஆம் திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை அரசு எடுத்து வருகிறது.