ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை காப்பாற்றிய முஸ்லிம் அமைச்சர்..! யார்..?
வில்பத்து காட்டுக்குள் பயிற்சி முகாம்களில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களை ஒரு அரசியில்வாதி பொலிஸ் பொலிஸ் நிலையத்திலேயே காப்பாற்றியதாக கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,
அந்த அரசியல்வாதி மீது நடவடிக்கை எடுக்கப்படாமை எதற்காக என நாடாளுமன்றில் நேற்றய முனம் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
இந்த நாட்டின் அமைச்சர் ஒருவர் மன்னார் மறைமாவட்ட ஆயரை பயங்கரவாதி என்றார். இன்று கத்தோலிக்க ஆலயங்களில் குண்டு வெடித்துள்ளது.
இதேநேரம் இங்கே செயல்படும் முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள் அரசியல்வாதிகளின் அனுசரனையின்றி எவற்றையும் செய்யமுடியாது. இது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு தெரியும்.
ஆனால் அந்த அமைச்சரை விசாரித்தால் தனது ஆட்சி இல்லாது போய்விடும் எனப் பிரதமர் அஞ்சுகின்றார்.
இதேநேரம் இதனோடு தொடர்புபட்டதான ஆளுநர்களை விசாரித்தால் தனக்கு அடுத்த தேர்தலில் முஸ்லீம் வாக்கு கிடையாது என ஜனாதிபதி என்று பயப்படுகின்றார்.
இதேநேரம் வில்லபத்தி காட்டுப் பகுதியில் பயற்சி முகாம் செய்பட்ட அதேநேரம் அங்கே பாரிய தொழிற்சாலை ஒன்றும் உள்ளது.
அதன் பங்காளர் யார் எனக் கண்டறிந்தாலே போதும் இதன் பின்னால் யார் இருப்பர் என்பதனை உறுதி செய்வதற்கு.
இந்த நாட்டில் இடம்பெற்ற கெண்டுத் தாக்குதல்களில் தமிழ் பேசும் கத்தோலிக்கர்களே இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இதனையும் ஆராய வேண்டும். என்றார்.