மிலேச்சத்தனமான தீவிரவாதிகளுடன் தொடா்பை பேணிய கிழக்கு ஆளுநா், அரசியல்வாதிகள் அனைவரையும் விசாாியுங்கள்.. சுமந்திரன் அதிரடி.

ஆசிரியர் - Editor I
மிலேச்சத்தனமான தீவிரவாதிகளுடன் தொடா்பை பேணிய கிழக்கு ஆளுநா், அரசியல்வாதிகள் அனைவரையும் விசாாியுங்கள்.. சுமந்திரன் அதிரடி.

இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான தற்கொலை தாக்குதல்களை நடாத்தியவா்கள் தேசிய தௌஹீத் அமைப்பின் உறுப்பினா்கள் என்பது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்த அமைப்புடன் தொடா்பை பேணிய சகலரையும் விசாாியுங்கள். என நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன் கூறியுள்ளாா். 

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், தாக்குதல்கள் தொடர்பில் குறித்த ஒரு சமூகத்தை விமர்சிக்கக் கூடாது. முஸ்லிம் மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்ட போதும், 

அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதில்லை. அதனை நாங்கள் மதிக்கிறோம். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு நெருக்கமான தொடர்புகள் இருப்பது பல சந்தேகங்களை எழுப்புகின்றது. 

அந்த அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகரிகள் உள்ளிட்ட அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். அடிப்படைவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த நிலையில், அவை ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

நாங்கள், வடக்கு- கிழக்கில் துக்கம் நாள் கடைப்பிடிப்பதற்கே அழைப்பு விடுத்தோம். ஆனால், கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அதனை கடையடைப்பு என்கிறார். அது கடையடைப்பு இல்லை. துக்கம் நாள் என்று நான் தெளிவாகக் கூறுகிறேன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு