தற்கொலைக் குண்டுதாரிகளின் விபரங்களையும் வெளியிட்டது ஐஎஸ்!

ஆசிரியர் - Admin
தற்கொலைக் குண்டுதாரிகளின் விபரங்களையும் வெளியிட்டது ஐஎஸ்!

ஈஸ்டர் நாளன்று இலங்கையில் நிகழ்த்திய குண்டுவெடிப்புகளுக்கு உரிமை கோரியுள்ள ஐ.எஸ் என்ற இஸ்லாமிய தேச பயங்கரவாதக் குழு, தாக்குதல்களை தற்கொலைக் குண்டுதாரிகளின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.

கொழும்பு,நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்கு வைத்து ஏழு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு உரிமை கோரி ஐ.எஸ் அமைப்பு, அரபுமொழியில் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையொன்றில், தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இயக்க பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அபு ஒபைடா, அபு அல் முக்தார், அபு காலீல், அபு ஹம்ஷா, அபு அல்பரா, அபு முகம்மட்மற்றும் அபு அப்துல்லாஹ் ஆகியோரே இந்தத் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஐ.எஸ் தெரிவித்திருக்கின்றது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் அபுஹம்ஷா குண்டை வெடிக்க வைத்துக் கொண்டதுடன், நீர்கொழும்புபுனித செபஸ்தியார் தேவாலயத்தின் மீதான தாக்குதலை அபு காலீல் வெடிக்கவைத்துக் கொண்டதாகவும் ஐ.எஸ் கூறியுள்ளது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீதான தாக்குதலை அபு முகம்மட் மேற்கொண்டுள்ளார். எஞ்சியவர்கள் கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் ஐ.எஸ் அறிவித்துள்ளது.

இதேவேளை இந்தத் தாக்குதல்தாரிகள் தாக்குதல்களுக்கு முன்னதாக ஐ.எஸ் கொடிக்கு முன்னால் எடுத்துக் கொண்ட நிழல் படங்களையும் ஐ.எஸ் ஆயுததாரிகளின் ஊடகமான ஹமாக் ஊடகம் வெளியிட்டிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு