27 இடங்களில் தாக்குதல் நடாத்த திட்டம்..! தீவிரவாதிகளுக்கு உதவிய அரசியல்வாதிகளின் குடும்பி குற்றப்புலனாய்வு பிாிவின் கைகளுக்குள்..
உயிா்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளில் தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற சமயம் 27 இடங்களில் தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளின்போது தொியவந்துள்ளதாக பாதுகாப்பு தரப்புக்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.
தெஹிவளை வெடிப்புச் சம்பம் தொடர்பிலும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த குண்டு தெஹிவளை சென் மேரிஸ் தேவாலயத்தை இலக்கு வைத்துக் கொண்டுவரப்பட்டதாகவும், பொலிஸாரின் பாதுகாப்பு காரணத்தினால்,
தாக்குதல்தாரி மீண்டும் தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அங்கு குண்டை கழற்றி வைக்கும்போது அது வெடித்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதேவேளை தெஹிவளை சென் மேரிஸ் தேவாலயத்தின் காணிக்கை பெட்டி சம்பவனாலுக்கு முதல் நாள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தேசிய தவ்ஹீத் அமைப்பின் தலைவர் என கூறப்படும் முக்கிய சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹஷிம் சங்ரில்லா தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், அவரின் மரபணு சோதனைகளை நடத்தி உறுதிப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தகவல்.
அத்துடன் தேசிய தவ்ஹீத் அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய அரசியல் வாதிகள், செல்வந்தர்கள் உள்ளிட்ட பலர் தொடர்பிலான தகவல்கள் குற்றபுலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.