SuperTopAds

பொலிஸ்மா அதிபா் பதவி நீக்கப்படுகிறாா்..! இறுதி தீா்மானம் ஜனாதிபதி, பிரதமா், சபாநாயகா் கைகளில்.

ஆசிரியர் - Editor I
பொலிஸ்மா அதிபா் பதவி நீக்கப்படுகிறாா்..! இறுதி தீா்மானம் ஜனாதிபதி, பிரதமா், சபாநாயகா் கைகளில்.

இலங்கையில் இடம்பெற்ற தொடா் குண்டு வெடிப்புக்கள், தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடா்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்க தவறியமைக்காக பொலிஸ்மா அதிபா் பூஜித ஜயசுந்தர பதவி நீக்கப்படவேண்டும் என கோாிக்கைகள் வலுப்படுத்தப்படும் நிலையில், 

பதவி நீக்குவதா? இல்லையா? என்பது தொடா்பாக இன்று இறுதி தீா்மானம் எடுக்கப்படும். என எதிா்பாா்க்கப்படுகின்றது.  இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் தீர்மானிக்கவுள்ளனர்.

இலங்கையில் நேற்று முன்தினம் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பெருந்திரளான மக்களின் உயிர் பலி கொடுக்கப்பட்ட சம்பவமானது பாதுகாப்பு குறைப்பாடுகளினாலேயே இடம்பெற்றுள்ளது.

இதனை ஒப்புக்கொண்டு, நடந்த சம்பவங்களை பொறுப்பேற்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவியில் இருந்து விலக வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அனுமதியின்றி நீர்கொழும்பில் தங்கியிருந்த ஒன்பது பாகிஸ்தானியர்கள் கைதாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.