தற்கொலை குண்டுதாரியை பாதுகாத்த அரசியல்வாதிகள் யார்..? சிக்கபோவது யார்?
இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதலை நடாத்திய தீவிரவாதிகளில் ஒருவர் பெளத்த சிலைகள் மீது தாக்குதல் நடாத்தியதற்காக கைது செய்யப்பட்டு அரசியல் அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டவர்.
மேற்கண்டவாறு அமைச்சர்களான றாஜித சேனாரத்ன மற்றும் கபீர்ஹாசிம் ஆகியோர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். கொழும்பில் இன்று இடம்பெற்ற இருவேறு ஊடகவியலாளர் சந்திப்புக்கிளில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் ஈடுபட்ட குண்டுதாரிகளில் ஒருவர் ஏற்கனவே புத்தர் சிலைகளை தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் எனவும்,
பின்னர் கடிமையான அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டதாக இரு அமைச்சர்களுமே சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில் தீவரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுடன்
முஸ்லீம் அரசியல்வாதிகள், கிழக்கு ஆளுநர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள வெளியாகும் நிலையில் குண்டு வெடிப்பு குறித்த விசாரணை
வளையத்திற்குள் முஸ்லிம் அரசியல்வாதிகளும் சிக்குவார்கள் என்றே நம்பப்படுகிறது.