இலங்கை மீதான பயங்கரவாத தாக்குதலின் பின்னணி இதுதானா..? சூத்திரதாரி இவர்தானா..?

ஆசிரியர் - Editor I
இலங்கை மீதான பயங்கரவாத தாக்குதலின் பின்னணி இதுதானா..? சூத்திரதாரி இவர்தானா..?

இலங்கையில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் என இஸ்லாமியர் ஒருவருடைய புகைப்படத்தை CNN ஊடகம் வெளியிட்டுள்ளது.

மேலும் இலங்கையிலும் தாக்குதல் நடாத்தப்பட்ட இடங்களில் குறித்த நபரை ஒத்ததான மறைகாணி புகைப்படம் சிக்கியுள்ளதாக தொடர்ந்தும் செய்திகள் வெளியாகி வருகிறது.

CNN ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறித்த நபருடைய பெயர் சஹ்ரான் ஹாசிம் எனவும் இவர் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடாத்த திட்டமிட்டதாகவும்,

பின்னர் அது முறியடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளதுடன் குறித்தநபர் பாகிஸ்தான் நாட்டிலிருந்து இயக்கப்படும் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் எனவும் அடையாளப்படுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு