SuperTopAds

விரும்பினால் பரீட்சை எழுதலாம் கட்டாயமல்ல.. தரம் 5 மாணவா்கள் சித்திரவதையிலிருந்து விடுதலை..

ஆசிரியர் - Editor I
விரும்பினால் பரீட்சை எழுதலாம் கட்டாயமல்ல.. தரம் 5 மாணவா்கள் சித்திரவதையிலிருந்து விடுதலை..

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தரம் 5 மாணவா்களுக்கான புலமைப்பாிசில் பரீட்சையில் மாணவர்கள் விரும்பினால் தோற்றலாம் எனவும், அவர்கள் தோற்றுவது கட்டாயமானதல்ல எனவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக்க அறிவித்துள்ளார்.

தரம் 05 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவது கட்டாயமில்லை எனும் அரசாங்கத்தின் நிலைப்பாடு, அதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்ட திகதி முதல் செல்லுபடியாகுமெனவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமில்லையெனத் தெரிவித்து கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இலக்கம் 08/2019 எனும் சுற்று நிருபத்தில், தீர்மானம் நடைமுறைக்கு வரும் வருடம் குறிப்பிடப்படாததால் மாணவர்கள், 

பெற்றோர், ஆசிரியர்கள் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளதாக கல்வி அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து அமைச்சின் மேலதிகச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.