SuperTopAds

புயல் வேகத்தில் வாகனம் வருகதை கண்டேன். ஆனால் சில நொடிகளில் இடி விழுந்ததுபோல் சத்தம் கேட்டது. பேருந்து சாரதி கண்ணீருடன் வாக்மூலம்..

ஆசிரியர் - Editor I
புயல் வேகத்தில் வாகனம் வருகதை கண்டேன். ஆனால் சில நொடிகளில் இடி விழுந்ததுபோல் சத்தம் கேட்டது. பேருந்து சாரதி கண்ணீருடன் வாக்மூலம்..

மஹியங்கணை தேசிய பாடசாலைக்கு முன்னால் இடம்பெற்ற கோர விபத்து தொடா்பாக பேருந்து சாரதி அதிா்ச்சி கரமான வாக்குமூலத்தை வழங்கியிருக்கின்றாா். 

10 போின் உயிாிழப்புக்கு காரணமான இந்த விபத்து குறித்து பொலிஸாா் மேற்கொண்டுள்ள தீவிர விசாரணைகளிலேயே இந்த வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது. 

சம்­பவம் தொடர்பில் சாரதி வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில்,

நான் அதி­காலை 1.15 மணி­ய­ளவில் மஹி­யங்­கனை நகரிலுள்ள உண­வகம் ஒன் றில் பஸ்ஸை நிறுத்­தினேன்.

அங்கு தேநீர் அருந்­திய பின்னர் மீண்டும் பய­ணத்தை ஆரம்­பித்தேன் பய­ணத்தை ஆரம்பித்து ஒரு சில நிமி­டங்­களில் அதிக வேகத்­துடன் பிழை­யான பகு­தியில் வேன் ஒன்று வரு­வ­தனை நான் அவ­தா­னித்தேன்.

நான் முடிந்தளவு ஓரத்­துக்கு பஸ்ஸை நகர்த்திக் கொண்டு சென்றேன் எனினும் அந்த வேன் தனது வேகத்தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் நெருங்­கி­ வந்­தது.

நொடிப்­பொ­ழுதில் இடி விழுந்­த­தைப் போன்று இந்த வேன் மோதியது நான் எவ்வளவு முயற்சித்தும் அதனைத் தடுக்க முடியவில்லை என மஹி­யங்­க­னையில் விபத்துக்குள்ளான தனியார் பஸ் சாரதி தெரிவித்துள்ளார்.