வீதிகளை புனரமைப்பு செய்ய கிரவல் இல்லையாம்..! இருந்த கிரவலை எல்லாம் கள்ளருக்கு விற்றால் எப்படி கிரவல் இருக்கும்? மக்கள் முணுமுணுப்பு..
கிளிநொச்சி மாவட்டத்தில் ஹம்பரெலிய திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட வீதிகளை புனரமைப்பு செய்ய கிரவல் மண் பெற்றுக் கொள்ள முடியவில்லை. என அரசாங்க அதிபா் சுந்தரம் அருமைநாயகம் கூறியுள்ளாா்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சேதமடைந்தவீதிகள் கட்டம் கட்டமாக புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு வீதிகளை புனரமைப்பதற்குரிய கிரவல் மண்ணைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் அதனைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலைகாணப்படுவதாகவும் பல்வேறுதரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கம்பரலியதிட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வீதிகளைபுனரமைப்பதற்குரிய கிரவலைப்பெற்றுக்கொள்வதில் பிரச்சனைகள் காணப்படுகின்றன.
தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரவலுக்கான தட்டுப்பாடு காணப்படுவதால் எதிரகாலத்தில் அங்கிருந்து கிரவலைவழங்க முடியாத நிலை ஏற்படும் என்று முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கிரவரைப்பெற்றுக்கொள்ளமுடியாதுபோகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.