வட்டுவாகல் பாலம் புனரமைப்பு எப்போது..? கண்ணை மூடிக் கொண்டிருக்கும் அதிகாாிகளிடம் கேள்வி.

ஆசிரியர் - Editor I
வட்டுவாகல் பாலம் புனரமைப்பு எப்போது..? கண்ணை மூடிக் கொண்டிருக்கும் அதிகாாிகளிடம் கேள்வி.

முல்லைத்தீவு- வட்டுவாகல் பாலம் மிக மோசமாக சேதமடைந்திருக்கும் நிலையில் இந்த பாலம் ஊடான வீதியை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு அசௌகாியங்களை சந்தித்து வருகின்றனா். 

2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னரும் பாலம் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

பலதடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்து கூறியும் புனரமைப்பு பணிகள் எவையும் நடைபெறவில்லை.

இந்தப் பாலத்தின் ஒருபகுதியில் உடைப்பு ஏற்பட்டு சீர்செய்யப்பட்ட நிலையில் தற்போது பாலத்தின் நடுப்பகுதியில் உடைப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.

வட்டுவாகல் பாலத்தினை நம்பி பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் வீச்சுவலை கொண்டு றால்,நண்டு போன்ற கடல் உணவுகளை பிடித்து தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் இதன் ஊடாக செல்லும் போது மேலும் உடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு