இந்திரலோக கோலம் பூணுகிறது வல்வெட்டித்துறை..
யாழ்.குடாநாட்டில் சிறப்புமிக்க வல்வெட்டித்துறை இந்திர விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்திர விழாவுக்கான ஒழுங்கமைப்புக்கள் முனடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்திர விழாவை முன்னிட்டு, வல்வெட்டித்துறை ஊழிக்காடு தொடக்கம் வல்வெட்டித்துறை பொலிகண்டி வரைக்குமான சுமார் நான்கு கிலோமீற்றர் தூதரத்துக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்குமில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 300க்கும் மேற்பட்ட வாழைகள் இந்த விழாவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்துக் கடவுளர்களின் திருவுருவங்கள் பொருத்தப்பட்ட 10 கட்அவுட்கள் பெரியளவில் தயாரிக்கப்பட்டுள்ளன. சுமார் 100 புகைக்கூண்டுகள் விடப்படவுள்ளன.
அவற்றில் ஐந்து கூடுகள் அறுபது அடிகள் உயரமுடிவை. வாணவேடிக்கைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏழு இசைக்குழுக்கள் இசை வழங்கத் தயாராகியுள்ளன.
வில்;லுப்பாட்டு, நாடகம், நடனம், பாரம்பரிய நிகழ்வுகள் என்பவற்றுடன் கடலில் மேடை அமைத்தும் ஓர் இசை நிகழ்வு நடத்தப்படவுள்ளது. 50 வருடங்களுக்கும் மேலாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த விழாவை யாழ்ப்பாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.