SuperTopAds

நிறை வெறியில் மோட்டாா் சைக்கிள் ஓடி விபத்துக்குள்ளான பொலிஸாா், வெறியில் வைத்தியசாலைக்குள் அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
நிறை வெறியில் மோட்டாா் சைக்கிள் ஓடி விபத்துக்குள்ளான பொலிஸாா், வெறியில் வைத்தியசாலைக்குள் அட்டகாசம்..

நிறை மதுபோதையில் மோட்டாா் சைக்கிள் ஓட்டிய இரு பொலிஸாா் ஆசிாியை மீது மோட்டாா் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாக்கியதுடன், தாமும் வீதியில் விழுந்து படுகாயமடைந்துள்ளனா். 

பின்னா் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் தாதியா்களையும், வைத்தியசாலை ஊழியா்களையும் தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளனா். 

சம்­ப­வம் தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

சுன்­னா­கம் பகு­தி­நோக்கி உந்­து­ரு­ளி­யில் பய­ணித்த இரு பொலி­சா­ரும் மது­போ­தை­யில் உந்­து­ரு­ளி­யைச் செலுத்திச் சென்­ற­தோடு வீதி­யால் பய­ணித்த பெண் ஆசி­ரி­யர் ஒரு­வ­ரை­யும் மோதித்­தள்­ளி­னர்.

இதன்­போது வீழ்ந்த இரு பொலி­சா­ரும் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட சம­யம் இரு­வ­ரும் போதை­யின் உச்சத்­தில் மருத்­து­வ­ம­னை­யில் இருந்த அலு­வ­லர்­க­ளு­டம் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இத­னை­ய­டுத்து அங்கு பணி­பு­ரி­யும் சிங்­க­ள­மொழி தாதி­யர்­கள் உதவ முற்­பட்­ட­போ­தும் அவர்­க­ளை­யும் தகாத வார்த்­தை­க­ளால் ஏசி­ய­தால் குறித்த தாதி­யர்­க­ளும் ஒதுங்­கிக் கொண்­ட­னர். 

இந்த விட­யம் மருத்­து­வ­ம­னை­யின் பணிப்­பா­ள­ரின் கவ­னத்­துக்­கும் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.