ஆடு மேய்க்க சென்றவர் கடும் வெய்யிலால் மயங்கி விழுந்து மரணம்..

ஆசிரியர் - Editor
ஆடு மேய்க்க சென்றவர் கடும் வெய்யிலால் மயங்கி விழுந்து மரணம்..

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் ஆடு மேய்க்க சென்ற குடும்பத்தலைவர் திடீரென மயக்கமடைந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

கடும் வெப்பநிலை காரணமாக குடும்பத்தலைவர் மயமடைந்து பின்னர் உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பபட்டதாகப் பொலிஸார் கூறினர்.

முல்லைத்தீவு பொன்னகர் பகுதியில் இன்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

முல்லைத்தீவு முள்ளியவளை முதலாம் கோயில் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் தயானந்தன் (வயது-51) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலத்தை மாஞ்சோலை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

Radio
×