SuperTopAds

அடுத்த சில மணி நேரத்தில் கொழும்பு- மாத்தறை- மன்னாா் கடற்பகுதிகளில் 70 தொடக்கம் 80 கிலோ மீற்றா் வேகத்தில் காற்று வீசும்..!

ஆசிரியர் - Editor I
அடுத்த சில மணி நேரத்தில் கொழும்பு- மாத்தறை- மன்னாா் கடற்பகுதிகளில் 70 தொடக்கம் 80 கிலோ மீற்றா் வேகத்தில் காற்று வீசும்..!

அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் மாத்தறையில் இருந்து கொழும்பு ஊடாக மன்னார் வரையான கடற்பகுதியில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்போது , குறித்த பகுதிகளில் 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை , இன்று இரவு நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் இவ்வாறு 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை நேரத்தில் பலத்த மின்னல் தாக்கத்திற்கும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியதற்குமான சாத்தியம் அதிகம் உள்ளது.

மின்னல் தாக்கங்களினாலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை 

குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்