லண்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் விடுதலை!

ஆசிரியர் - Admin
லண்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் விடுதலை!

லண்டன் - லூட்டன் விமான நிலையயத்தில் வைத்து கடந்தவாரம் ​கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் நால்வரும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த புதன்கிழமை இவர்கள் சர்வதேச விமானம் ஒன்றின் மூலம் லூட்டன் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றில் அங்கத்துவம் பெற்றிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் விசாரணைகளுக்குப் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமையே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Ads
Radio
×