850 வருடங்கள் பழமையான பிராஸ் நாட்டின் பாரம்பாிய சொத்து எாிந்து நாசம்..

ஆசிரியர் - Editor I
850 வருடங்கள் பழமையான பிராஸ் நாட்டின் பாரம்பாிய சொத்து எாிந்து நாசம்..

பிரான்ஸ் தலைநகா் பாிஸ் நகாில் 850 ஆண்டுகள் பழமையான தேவாலயம்  தீ பிடித்து எாிந்திருக்கின்றது. 

பாரம்பரிய சின்னமாக திகழும் சுமார் 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ விபத்தினால் த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டு கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கிய பகுதி தீ விபத்தில் இருந்து தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தேவாலயத்தில் உள்ள அதிகளவான புராதனமான கலைப்பொருட்களை காப்பாற்றுவதற்காக சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் 

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதான சின்னமாக கருதப்படும் ஊசி கோபுரத்தை பாதுகாக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும் அந்த கோபுரம் முற்றிலும் எரிந்து 

இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழ்ந்துவந்த இந்த பழமையான தேவாலயம் தீக்கிரையானமைக்கான காரணம் எதுவும் 

இன்னமும் தெளிவாக தெரியவில்லை . சுமார் 6 மில்லியன் யூரோ செலவில் இந்த தேவாலயத்தின் கோபுரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு