புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் 'ப்ரோக்கோலி'.

ஆசிரியர் - Admin
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் 'ப்ரோக்கோலி'.

ப்ரோக்கோலியில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) ஆகியவையும் இருக்கின்றன. ப்ரோக்கோலி யின் சிறிய பூ போன்ற பகுதியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் இதன் இலைகளிலும் தண்டுகளிலும் அதிக அளவிலான பினாலிக் (Phenolic), ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. அதனால் இப்போது பலரும் ப்ரோக்கோலியின் இலைகளையும் தண்டையும் உணவாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி. இதில் அதிகளவில் இருக்கும் சல்ஃபோரபேன் புற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் படைத்தது. சிறிய அளவில் இருக்கும் ப்ரோக்கோலி பெரிய காய்களைவிடச் சிறந்தது. இளசான ப்ரோக்கோலி புரோஸ்டேட் புற்றுநோய், பெண்களிடம் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்த் தாக்குதலைத் தடுக்கிறது என சில ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். ஆரம்ப கால மார்பகப் புற்றுநோயை அழிக்கும் சக்தி ப்ரோக்கோலிக்கு உண்டு.

ப்ரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான ஃபோலேட், இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதிலிருக்கும் பாலிபினால் இதயச் செயல்பாடுகளை மேம்படுத்தும். கால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம். ப்ரோக்கோலி உணவைச் சாப்பிட்டால், கால்சியம் சத்து அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும். இதிலிருக்கும் குரோமியம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்; இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும்.

ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 2 ஆகியவையும் பார்வைத்திறன் மேம்பட உதவுபவை.ப்ரோக்கோலி , நம் உடலில் ஆறு சதவிகிதம் வரை கெட்டக் கொழுப்பைக் குறைக்கிறது’ என ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே, பல நாடுகளில் இதை அதிகம் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். எலும்புகளின் உறுதிக்குக் கால்சியம் அவசியம் தேவை. கால்சியம் சத்து நிறைந்தது ப்ரோக்கோலி. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், எலும்புகள் வலுப்படும். இதிலிருக்கும் வைட்டமின் கே எலும்பு உறுதிக்கு உதவும்.

கொழுப்புச்சத்துகள் இல்லாத உணவுப் பழக்கத்துக்கு வைட்டமின், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளே சிறந்தவை. அந்த வகையில், கலோரிகள் குறைந்த உணவான ப்ரோக்கோலியை நம் உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அரை கப் ப்ரோக்கோலியில் 25 கலோரிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் மற்ற சத்துகள் நிறைவாக இருக்கின்றன. நாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்துக் குறைந்தால், ரத்த செல்களின் அளவு குறையும். இதனால் ரத்தச்சோகை ஏற்படும். ப்ரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம்.

ப்ரோக்கோலியை எண்ணெயில் பொரித்தால் அதிலிருக்கும் வைட்டமின் சி, புரதச்சத்துகள் மற்றும் மினரல்களை இழக்க நேரிடும். இதை ஆவியில் வேகவைத்தால் சத்துக்களை இழக்காமல் பாதுகாக்கலாம். சமைத்த ப்ரோக்கோலியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் குறைந்துவிடும். அதனால் பச்சைக் காய்கறியாக, அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும். சிலருக்கு இதனால் அலர்ஜி ஏற்படலாம். அவர்கள் மட்டும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கவும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு