வெற்றிகரமாக பறப்பை மேற்கொண்ட உலகின் மிகப் பெரிய வானூர்தி!
உலகின் மிகப் பெரிய வானூர்தி தனது பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து தரையிறங்கியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ‘ஸ்டிராட்டோலான்ச்’ என்ற புதிய நிறுவனத்தை பால் ஆல்லென் தொடங்கினார்.
வானூர்தியின் வடிவமைப்பு, கட்டுமானப் பணிகள் முடிந்து நிலையில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மோஜாவே வானூர்தி மற்றும் விண்வெளி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை காலை 6.58 மணிக்கு ‘மெகா’ வானூர்தி புறப்பட்டு சென்றது.
மோஜாவே பாலைவனப் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 189 மைல் வேகத்தில் சுமார் இரண்டரை மணிநேரம் வெற்றிகரமாக பறந்து தரையிறங்கியுள்ளது.
இரட்டை வானூர்தி போன்ற வடிவமைப்பைக் கொண்ட மெகா வானூர்தி 385 அடி அகலம், 238 அடி நீளம் கொண்ட இந்த விமானம் சுமார் 50 லட்சம் பவுண்டு எடை கொண்டதாகும். இதை நிறுத்தி வைக்க ஒரு பெரிய கால்பந்து திடல் அளவிலான இடம் தேவை.
ஆனால், இந்த வரலாற்றுப் பெருமைக்குரிய சாதனைக்கு சொந்தக்காரராக கருதப்படும் பால் ஜி ஆல்லென் கடந்த 15-10-2018 அன்று தனது 65-வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.