போர்க்குற்றவாளி கோத்தா போட்டியிட முடியாது! - சந்திரிகா

ஆசிரியர் - Admin
போர்க்குற்றவாளி கோத்தா போட்டியிட முடியாது! - சந்திரிகா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் போட்டியிடுவதற்கு நாட்டில் உள்ள அமைப்புக்களோ, சர்வதேச அமைப்புக்களோ ஒருபோதும் இடமளிக்கமாட்டாது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இன்னமும் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. அதற்கிடையே மஹிந்த அணியினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கியவர்களும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கொக்கரிக்கத் தொடங்கி விட்டனர். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் மீது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் போர் விதி மீறல்கள் தொடர்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறையில் இருக்க வேண்டிய கோத்தாபய ராஜபக்ச இரட்டைக் குடியுரிமை என்ற கவசத்தை அணிந்து கொண்டு அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் மாறி மாறிச் சுற்றுலா செல்கின்றார். அண்மையில் அவருக்கு எதிராக அமெரிக்காவில் இரு பாரதூரமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலங்கைக்குத் திரும்பி வந்துள்ள அவர் நாட்டு மக்கள் முன்னிலையில் நல்ல பிள்ளைக்கு நடிக்க முயல்கின்றார்.

இரட்டைக் குடியுரிமையுடன், போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கோத்தாபய , ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எமது நாட்டுச் சட்டமும், நாமும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு