48 மணிநேரத்தில் கொழும்பு வைத்தியசாலையில் மாத்திரம் 413 பேர் காயங்களுடன் அனுமதி!

ஆசிரியர் - Admin
48 மணிநேரத்தில் கொழும்பு வைத்தியசாலையில் மாத்திரம் 413 பேர் காயங்களுடன் அனுமதி!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில், புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் வீதத்தினால் அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் ஏற்பட்ட விபத்துக்களினால் 413 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் 113 பேர் வீதி விபத்துக்கள் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6% ஆல் குறைவடைந்துள்ளது.

வீடுகளில் ஏற்பட்ட விபத்துக்களினால் 49 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 22% ஆல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடம் தீ விபத்து காரணமாக 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அது கடந்த ஒருவர் மட்டுமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio
×