விவஸ்த்தை கெட்ட திருடன்..! கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

ஆசிரியர் - Editor
விவஸ்த்தை கெட்ட திருடன்..! கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

காணியை துப்பரவு செய்யுமாறு அறிவுறுத்தி நடப்பட்டிருந்த அறிவித்தல் பலகை திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி சுகாதார பிரிவினரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வரணி வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள தனியார் காணி ஒன்று டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான காரணிகள் காணப்படுவதாகவும் , 

அதனால் அக் காணியினை எதிர்வரும் 14 நாட்களுக்கு துப்பரவு செய்ய வேண்டுமென்றும் , தவறின் காணி உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

 என அறிவுறித்தி கடந்த 5ஆம் திகதி சாவகச்சேரி சுகாதார பகுதியினரால் காணியில் அறிவித்தல் பலகை பொருத்தப்பட்டது. 

அந்நிலையில் குறித்த அறிவித்தல் பலகை காணியில் இல்லாமையால் , அரச சொத்து திருடப்பட்டுள்ளது என கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகாதார பிரிவினர் முறைப்பாடு செய்தனர். 

Radio
×