பூநகாி விபத்தில் சிக்கிய கனடா நாட்டவா் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor
பூநகாி விபத்தில் சிக்கிய கனடா நாட்டவா் உயிாிழப்பு..

கிளிநொச்சி- பூநகாி பகுதியில் நேற்று நடைபெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கனடா நாட்டவா் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். 

கனடா பிரஜாவுரிமை பெற்ற, 66 வயதுடைய செல்லப்பா சுந்தரேஸ்வரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த மாதம் மனைவி பிள்ளைகளுடன் குடும்பமாக தாயகம் திரும்பி வேலணையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். 

அந்நிலையில் கடந்த 28ஆம் திகதி விசுவமடுவில் உள்ள தனது காணியை பார்க்கவென மோட்டார் சைக்கிளில் விசுவமடு சென்று திரும்பும் வழியில் பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானார்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்தவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு பூநகரி வைத்திய சாலையில் அனுமதித்தனர். 

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

Radio
×