சிவபெருமானும், புத்த பெருமானும் சாத்தான்களா..? நிகழ்வுக்கு அதிரடி தடை.

ஆசிரியர் - Editor
சிவபெருமானும், புத்த பெருமானும் சாத்தான்களா..? நிகழ்வுக்கு அதிரடி தடை.

இந்துக்களின் கடவுள் சிவனையும், பௌத்தா்களின் கடவுள் புத்தரையும் சாத்தான்களாக சித்தாிக்கும் கிறிஸ்த்தவ மத நிகழ்வுக்கு பொலிஸாா் அதிரடியாக தடைவிதித்துள்ளனா். 

மாநகர சபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மத நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. 

குறித்த மத நிகழ்வானது ஏனைய மதங்களை இழிவு படுத்தும் நிகழ்வு எனவும் , அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் 

யாழ்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.குறித்த முறைப்பாட்டில் , குறித்த மத நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. 

அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள் என கூறப்பட்டது. அதற்கான காணொளி ஆதாரம் உண்டு (முறைப்பட்டாளரால் காவற்துறையினரிடம் அது ஒப்படைக்கப்பட்டது.

அவ்வாறு ஏனைய மத கடவுள்களை சாத்தான்கள் என கூறுவது, அந்த மதம் சார்ந்தவர்களை கோபமடைய செய்யும் செயற்பாடு. இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த மூவரே இந்த நிகழ்வை நடத்துகின்றனர். 

என தெரிவிக்கப்பட்டு உள்ளது.அவற்றை ஆராய்ந்த காவற்துறையினர் குறித்த நிகழ்வை நடாத்துவதை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த மத நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் கல்முனை பிரதேசத்திலும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio
×