இரணைமடு அறிக்கை பிரதம செயலாிடம்..! துாக்கி எறியப்படவுள்ள அதிகாாிகள் யாா்?

ஆசிரியர் - Editor I
இரணைமடு அறிக்கை பிரதம செயலாிடம்..! துாக்கி எறியப்படவுள்ள அதிகாாிகள் யாா்?

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீா் முகாமைத்துவம் சாியாக பேணப்படாமையினால் பாாிய அனா்த்தம் உண்டானதாக சந்தேகிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை வடமாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. 

வடக்கு மாகாணத்தின் மிகப் பெரும் நீர்த் தேக்கமான இரணைமடுக் குளமானது அதன் கொள்ளவு 34 அடியில் இருந்து 36 அடியாக உயர்த்தப்பட்ட பின்பு சுமார் 3 அடி நீர் வான் பாயும் நிலமை ஏற்பட்டிருந்தது. அவ்வாறு வான் பாய்ந்த நிலமையில் அதிகாாிகளின் கவனயீனம் என விமா்சிக்கப்பட்டது. 

இவ்வாறு எழுந்த விமர்சனத்தையடுத்து குறித்த அனர்த்தம் ஏற்பட குளத்தின் பொறுப்பு வாய்ந்த திணைக்களத்தின் பணிகளும் காரணமாக அமைந்ததா எனக் கண்டறிவதற்காக முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயினால் ஒரு குழு நியமிக்கப்பட்டது. 

அவ்வாறு நியமிக்கப்பட்ட குழுவில் முன்னர் அங்கம் வகித்த பொறியியலாளர் சிவகுமார் குறித்த விடயத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தவறும் காரணம் என ஆய்விற்கு முன்னரே கருத்துக் கூறியமையினால் அவரை அக் குழுவில் இருந்து நீக்குமாறு கேட்கப்பட்டதால் அவா் நீக்கப்பட்டாா்.

இவ்வாறு இடம்பெற்ற விசாரணை அறிக்கை கடந்தவாரம் தற்போதைய ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வடமாகாண பிரதம செயலாளரிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த அறிக்கை தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இன்றுவரை கரம் கிட்டவில்லை எனப் பதிலளித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு