பகிடிவதை என்ற பெயாில் பெண் மாணவியுடன் தாகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த மாணவருக்கு வகுப்பு தடை..!
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவா்கள் வரவேற்பு நிகழ்வில் பகிடிவதை இடம்பெற்றமை தொடா்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவன் கற்கை நெறியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிா்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கலைப்பீட வரவேற்பு நிகழ்வின்போது இடம்பெற்ற பகிடிவதையில் பெண் மாணவியின் மீதும் எல்லை தாண்டிய வகையில் மூத்த மாணவர் ஒருவர் நடக்க முற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இந்த விடயம் தொடா்பில் செய்திகள் வெளிவந்த நிலையில் மாணவர் ஒன்றியம் முதல் நிர்வாகம் வரையில் குறித்த சம்பவம் நடக்கவேயில்லை. என மறுத்துவந்தன.
இருப்பினும் குறித்த சம்பவத்துடன் தொட்புபட்டதாக மாணவன் ஒருவருக்கு கற்கை தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு முன்பும் ஓர் சம்பவத்மில் ஈடுபட்டதாக மற்றுமோர் மாணவனும் கற்கையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இதேநேரம் வரவேற்பு நிகழ்வு தொடர்பில் துணை வேந்தரிடம் முறையிடப்பட்டதாக வந்த தகவல் தவறானது எனவும் குறித்த மாணவி உதவிப் பதிவாளரின் கவனத்திற்கே மேற்படி சம்பவத்தை கொண்டு சென்றிருந்தார். அதன்பின்பே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவ் விசாரணையின் இறுதி முடிவுவரையில் மாணவர்களிற்கான தடை தொடரும் என கூறப்படுகிறது.