100 மில்லியன் ரூபாய் ஒருநாள் வருமானம். சாதனை படைத்த இலங்கை போக்குவரத்து சபை..
தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தை ஒட்டி இலங்கையில் நேற்று வெள்ளிக் கிழமை அதிகளவான பேருந்து பயணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனால் போக்குவரத்து சபைக்கு 100 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
புத்தாண்டினை முன்னிட்டு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டமையினால் அதிக பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது.
ஏனைய வருடங்களை விடவும் அதிக பேருந்து பயணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
கொழும்பில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு சென்ற பயணிகளின் எண்ணிக்கையிலேயே பாரிய அதிகரிப்பு ஏற்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் மாத்திரம் 100 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தினசரி வருமானத்தில் இது தான் அதிகூடிய வருமானமாக கருதப்படுகின்றது.