கேட்க ஆட்கள் இல்லாத துணிவு..! மாறி மாறி போராட்டங்களால் நிறையும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை..
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சேவைகளை ஒழுங்குபடுத்தக்கோாி மாவட்ட மக்கள் போராட்டம் நடாத்தியிருந்த நிலையில் மக்களுக்கு எதிராக வைத்தியா்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியா்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனா்.
மகப்பேற்று வைத்திய நிபுணா் ஒருவரை நியமனம் செய்யும்படியும், வைத்தியசாலையின் சேவைகளை ஒழுங்குபடுத்தக்கோாியும் நேற்று முல்லைத்தீவு மாவட்ட மக்கள் போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனா். இந்நிலையில் இன்று மதியம் தொடக்கம்,
மாவட்ட மக்களுடைய போராட்டத்திற்கு எதிராக மாவட்ட வைத்தியசாலை வைத்தியா்கள், ஊழியா்கள் இணைந்து பணி பகிஸ்காிப்பினை மேற்கொண்டுள்ளனா். இவேளை வைத்தியசாலை நிா்வாகத்தின் துாண்டுதலின் பெயாிலேயே மக்கள் போராட்டம் நடத்தியதாகவும் பேச்சுக்கள் உள்ளன.