அமைச்சா், நாடாளுமன்ற உறுப்பினா்கள், அரச அதிபா் முன்னிலையில் இறுமாப்புடன் பேசிய இராணுவம். வாயை பொத்திக் கொண்டிருந்தனா் அனைவரும்.
கிளிநொச்சி மகா வித்தியாலயம் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு கேட்கும் காணிகளை வழங்கமாட்டோம். என கூறும் இராணுவம் அது தங்களிடம் அபிவிருத்திக்காக கொடுக்கப்பட்டது. என கூறியிருக்கின்றது.
இது குறித்து கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி மேஜா் ஜெனரல் ரவிப்பிாிய மேலும் கூறுகையில்,
நேற்று (11.04.19) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலகத்திற்குரிய காணியும் அதனோடினைந்த விளையாட்டு மைதானத்தையும் பாடசாலைக்கு கையளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனினால் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போதே கிளிநொச்சி இராணுவத்தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் படை முகாம்கள் இருப்பது மக்களின் பாதுகாப்புக்கே. எனவே படைமுகைாம்களை அகற்ற முடியாது. கொழும்பு போன்ற இடங்களில் பல பாடசாலைகளில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவிலேயே விளையாட்டு மைதானங்கள் உண்டு எனத் தெரிவித்த தளபதி,
தான் விளையாட்டுத்துறை அமைச்சருடன் பேசியதாகவும், கிளிநொச்சி விளையாட்டு மைதானம் புனரமைப்புச் செய்த பின் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு பயன்பாட்டிற்கு கையளிக்கப்படும் எனவும் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளை கூட அங்கு நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு இராணுவ முகாம்களுக்கு ஊடாக பாதை வழங்க முடியாது என்றும் அங்கு பொது மக்கள் மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர்களும் செல்ல முடியாது அதற்கு அனுமதியில்லை என்றும் திட்டவட்டமாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்தார் கிளிநொச்சி படைகளின் தளபதி ரவிப்பிரிய தெரிவித்துவிட்டார்.