நவீன மயமாகும் யாழ்.நகரம், பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
யாழ்.மாநகா் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பதாள சாக்கடை திட்டம் தொடா்பாக பிரான்ஸ் அரசாங்க பிரதிநிதிகளை யாழ்.மாநகர முதல்வா் இ.ஆனோல்ட் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்.
முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் நேற்று இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடலில் நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் பிரதம பொறியியலாளர் விஜயகாந்த், பாதாளசாக்கடைத் திட்டத்திற்கான நிதி வழங்குனர்களின் சார்பில் அதன் பிரதிநிதிகள்,
யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பிரதம பொறியியலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.