அமொிக்காவிலிருந்து தலைதெறிக்க ஓடிவந்த கோட்டாவுக்கு வரவேற்பு..!

ஆசிரியர் - Editor I
அமொிக்காவிலிருந்து தலைதெறிக்க ஓடிவந்த கோட்டாவுக்கு வரவேற்பு..!

அமொிக்காவில் இரு வழக்குகளை எதிா்கொண்டு சா்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நாடு திரும்பியுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் கோட்டாபாய ராஜபக்ஸவை ஆதரவாளா்கள் வரவேற்றுள்ளனா். 

இதேவேளை, கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்க, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கடந்த திங்கட்கிழமை தகவல்கள் வெளியாகின.

தமது தந்தை கொலை செய்யப்பட்டமையானது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு தெரிந்து மற்றும் ஆலோசனைக்கு அமைய இடம்பெற்றுள்ளதாக கூறி அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இதுதவிர தென்னாபிரிக்காவை தலைமையகமாக கொண்ட ஐ.ரி.ஜே.பி நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்வுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளது.

2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஒருவரை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ளதாக கூறப்படும் 

வழக்குகளுக்கான எந்தவித அறிவித்தல்களும் இதுவரை கிடைக்க பெறவில்லை என அவரது ஊடக பேச்சாளரும் நகர சபை உறுப்பினமான மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு