கடைசி பந்தில் சிக்ஸ் - சென்னை அணியிடம் போராடி தோற்றது ராஜஸ்தான்

ஆசிரியர் - Admin
கடைசி பந்தில் சிக்ஸ் - சென்னை அணியிடம் போராடி தோற்றது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்கியா ரகானே, ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருவரும் அடித்து ஆடினர். ஆனால் அதன்பின்னர் சென்னை அணியினர் துல்லியமாக பந்து வீசினர்.

ரகானே 14 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 23 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும், ராகுல் திரிபாதி 10 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அப்போது ராஜஸ்தான் அணியின் எண்ணிக்கை 5 விக்கெட்டுக்கு 78 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ் சிற்டிது தாக்குப்பிடித்தார். அவர் 28 ரன்னில் அவுட்டானார். ரியான் பராக் 16 ரன்னில் வெளியேறினார். 

கடைசி ஓவரில் 18 ரன்கள் அடித்தனர். இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை அணி சார்பில் தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. வாட்சன் 0, டு பிளிசிஸ் 7, ரெய்னா 4, ஜாதவ் 1 என அடுத்தடுத்து வெளியேறினார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ஓவர்களில் 24 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து இருந்தது. இந்நிலையில் டோனியுடன் ராயுடு ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். ராயுடு 57 ரன்களில் அவுட் ஆனார். 

பொறுப்புடன் விளையாடிய டோனி அரை சதம் அடித்தார். கடைசி ஓவரில் டோனி போல்ட் என்ற முறையில் வெளியேறினார். இந்நிலையில் 3 பந்துகளுக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. சாட்னர் அடுத்த 2 பந்துகளில் 4 ரன்கள் அடித்தார். இதையடுத்து உதிரிகள் மூலம் 1 ரன் வர கடைசி பந்துக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சாட்னர் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு