ஜுலியன் அசாஞ்சயை எங்களிடம் தாருங்கள்! அமெரிக்க வேண்டுகோள்!
பிரித்தானியா காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட விக்கி லீக்ஸ் அமைப்பின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ச் தங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
உலக இரகசியத் தகவல்களை வெளியாக்கும் விக்கி லீக்ஸ் அமைப்பைத் தொடங்கிய 47 வயதான அசாஞ்ச் கடந்த 7 ஆண்டுகளாக லண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அடைக்கலம் பெற்று வந்தார்.
எக்குவடோர் அரசாங்கம் அசாஞ்சுக்கு அளித்த அடைக்கலத்தை மீட்டுக்கொண்டதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் காவல்துறை அவரைக் கைதுசெய்துள்ளது.
ஆயிரக்கணக்கான அமெரிக்காவின் ரகசிய அரசதந்திர ஆவணங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டது. அவற்றில் பல, உலகத் தலைவர்களின் அந்தரகங்க தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.
எனினும் அமெரிக்க அதிகாரிகளின் சார்பிலேயே அசாஞ்சைக் தங்கள் கைதுசெய்துள்ளதாக பிரித்தானிய காவல்துறை தெரிவித்துள்ளது.