விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது!
லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரித்தானியக் காவல்துறையினர் லண்டனில் இன்று கைது செய்துள்ளனர்.
ஈக்குவடோர் அரசு அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை திரும்பப் பெற்ற நிலையில் அசாஞ்சேவை பிரித்தானியக் காவல்துறையினர் கைது செய்து வெஸ்ட் மிண்ட்ஸ்டர் கோர்ட்டில் முன்னிறுத்தினர்.
2012ம் ஆண்டு லண்டனில் தஞ்சம் அடைந்த ஜூலியன் அசாஞ்சேவை 7 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட ஜூலியன் அசாஞ்சேவை தங்களிடம் கையளிக்குமாறு பிரித்தானியாவிடம் அமொிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை இணைய தளங்களில் வெளியிட்டவர்.
பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய நடவடிக்கைகளை அமொிக்கா முன்னெடுத்திருந்தது. பாலியல் வன்புணர்பு தொடர்புபட்ட வழக்கில் சுவீடன் நாட்டுக்கு அவர் நாடுகடத்தப்படவிருந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.
இந்நிலையில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்வடார் நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது. 7 வருடங்கள் கழிந்த நிலையில் அசாஞ்சேயின் பாதுகாப்பை ஈக்குடோர் நீக்கியதையடுத்து அவர் இன்று பிரித்தாகியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவருக்கு எதிராக சுவீடனில் பாலியல் துஸ்பிரயோக வழக்கு தொடரப்பட்ட போதும், அந்த வழக்கு கைவிடப்பட்டது.
ஈக்குவடோரில் அவர் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த போதும், பல சந்தர்ப்பங்களில் சர்வதேச சட்டங்களை அசாஞ்ச் மீறி இருப்பதாக தெரிவித்து, ஈக்குவடோர் அரசாங்கம் அந்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.
எனினும் அரசியல் நோக்கிற்காகவே இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் கீச்சகப் பதிவில் தெரிவித்துள்ளது.