139 வருடங்களின் பின் இலங்கை மக்கள் சந்தித்துள்ள அவலம். இதுவரை 5 போ் உயிாிழப்பு. 42 செல்சியஸை தொடுகிறது வெப்பம்..
1880ம் ஆண்டுக்கு பின்னா் இலங்கை பாாிய வறட்சியையும், கடுமையான வெப்பமான கால நிலையினையும் எதிா்கொண்டுள்ளதாக பேராசிாியா் சந்தன ஜயரத்ன கூறியுள்ளாா்.
139 வருடங்களுக்கு பின்னர் அதிக வெப்பமான வருடமாக 2019ஆம் ஆண்டை கூற முடியும். பொதுவாக அனைத்து வருடங்களிலும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இலங்கை ஊடாக சூரியன் உச்சம் கொடுத்து 15ஆம் திகதி இலங்கையை விட்டு சூரியன் நகரும்.
எனினும் தற்போது ஏற்பட்டுள்ள புவியியல் மாற்றம் இலங்கைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடும் வெப்ப நிலைக்கு காரணமாகியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் நடுப்பகுதி வரை அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் இலங்கையில் குறைவான காற்று நிலவி வருகின்றது. இதனால் வியர்வை காய்வதும் குறைவடைந்துள்ளது
விசேடமாக குழந்தைகள் மற்றும் வயோதிபர்களை சூரிய ஒளி படும் இடங்களுக்கு செல்ல அனுமதிக்க கூடாது. இதனால் இதயத்திற்கு உட்பட பாதிப்பு ஏற்படும்.
இந்த நிலைமைக்கு மத்தியில் அதிக நீர், இளநீர் போன்றவற்றை அதிகம் பருகுவதன் மூலமே உடலை பாதுகாக்க முடியும்.
42 பாகை செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரித்தால் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். விசேடமாக மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.