உாிமைகளை கேட்கும் மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடா்கிறது. மண்டைதீவு மக்களுக்கு கடற்படை அச்சுறுத்தல்...!

ஆசிரியர் - Editor I
உாிமைகளை கேட்கும் மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடா்கிறது. மண்டைதீவு மக்களுக்கு கடற்படை அச்சுறுத்தல்...!

தமது காணிகளை கேட்டு போராட்டம் நடாத்தும் மக்களை மனதளவில் அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளா்கள் செயற்பட்டதாக வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளாா். 

யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினர் சுவீகரிப்பதற்காக இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்த நில அளவீடு செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன்போதே புலனாய்வாளர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “போராட்டத்தின்போது பாதுகாப்புக்காக பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். 

பெரிய வாகனங்களும் கொண்டுவரப்பட்டிருந்தன. இதன்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் காணொளி எடுப்பது செய்தி சேகரிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.இதனையடுத்து,

 நான் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துமாறு அவர்களிடம் தெரிவித்தேன்.மண்டைதீவில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கில் எந்தப்பகுதியிலும் கட்டாய காணி சுவீகரிப்பிற்கு இடமளிக்க மாட்டோம். 

தற்போது ஜனநாயமாக நடக்கும் போராட்டங்கள் எதிர்காலத்தில் புரட்சிகரமான போராட்டமாக மாறும்” என மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு