செஞ்சோலை சிறுவா்களுக்காக மனம் இரங்கிய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு..

ஆசிரியர் - Editor I
செஞ்சோலை சிறுவா்களுக்காக மனம் இரங்கிய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு..

கிளிநொச்சி- செஞ்சோலை காணியை செஞ்சோலை நிா்வாகத்திடமே வழங்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகளின் காலத்தில் செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலையில் இருந்து வளர்ந்த பிள்ளைகள், 

யுத்தத்தின் பின்னர் எவ்வித பாதுகாப்பும் இன்றி வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தற்போது மலையாளபுரம் பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லம் அமைந்திருந்த காணியில், 

தற்போது 64 பிள்ளைகள், குடும்பங்களாகிய நிலையில் கொட்டகைகள் அமைத்து அங்கு வாழ்கின்றனர்.அவர்களுக்கு குறித்த காணியை பகிர்ந்தளிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்றியது.

குறித்த காணியை 13 உரிமையாளர்கள் தமது காணி என தெரிவித்து ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், யாருக்கு குறித்த காணியை பகிர்ந்தளிப்பதென்ற நிலையில் உள்ளதாகவும் அரச அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். எனினும் குறித்த காணி விடுதலைப் புலிகளால் பணம் கொடுத்து வாங்கப்பட்டதாகவும், 

அந்தக் காணியை உரிமை கோருபவர்களுக்கு வேறு காணிகளும் உள்ளமையால் அதை செஞ்சோலை பிள்ளைகளுக்கே வழங்க வேண்டும் எனவும் காணி உரிமை கோருபவர்களுக்கு வேறு காணி வழங்கலாம் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு