தமிழீழ விடுதலை புலிகள் உருவாக்கி, கட்டிக்காத்த மர முந்திாிகை தோட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடும் கூட்டுத்தாபனம்..!
பூநகாி, வெள்ளாங்குளம், கொண்ச்சி போன்ற பகுதிகளில் உள்ள மர முந்திாிகை தோட்டங்களை தம்மிடம் வழங்குமாறு மர முந்திாிகை கூட்டுத்தாபனம் மாவட்ட செயலகங்களிடம் விண்ணப்பம் செய்துள்ளது.
வெள்ளாங்குளத்தில் 500 ஏக்கரும் பூநகரியில் 474 ஏக்கர் நிலமும் கொண்டச்சியில் 450 ஏக்கர் நிலம் என்பனவற்றை தம்மிடம் ஒப்படைக்குமாறு திணைக்களம் கோரியுள்ளது.
இதேநேரம் வெள்ளாங்குளம் நிலத்தில் அந்தப் பகுதியில் நிலமற்ற மக்களுக்குப் பகிர்ந்து வழங்குவதற்கும் கொண்டச்சி நிலம் ஏற்கனவே இவ்வாறான திட்டத்துக்குள்ளும் உள்வாங்கப்பட்டுள்ளது.
நிலம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் வகையில் மாவட்டத்தின் மேலதிக செயலர்களை திணைக்களத்தில் இன்று இடம்பெறும் கலந்துரையாடலில் பங்குகொள்ளுமாறும் குறித்த திணைக்களம் விடுத்த அழைப்பின் பெயரில் மேலதிக மாவட்டச் செயலர்கள் (காணி) கொழும்புக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், பண்ணைகளைப் படையினர் 10 ஆண்டுகளாகக் கையகப்படுத்தி வருமானத்தைப் பெற்றபோது வாய் மூடியிருந்த திணைக்களங்களுக்கு தாரைவார்க்கும் செயற்பாட்டுக்கு
மாவட்டச் செயலகங்கள் உடன்படக் கூடாது. அந்த நிலத்தை மாவட்டத்தில் வாழ்விடம் அற்றவர்களுக்கும் கால்நடைகளின் மேச்சல்தரைகளுக்கும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.