பதவி விலகுகிறாா் ஜனாதிபதி சிறிசேனா..!

ஆசிரியர் - Editor I
பதவி விலகுகிறாா் ஜனாதிபதி சிறிசேனா..!

ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா தனது பதவியை துறந்து மீண்டும் ஜனாதிபதி தோ்தலுக்கு செல்லவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் சிறீ­லங்கா பொது­மக்­கள் முன்­னணி என்­ப­ன­வற்­றுக்­குள் அரச தலை­வர் வேட்பாளர் யார்?

என்­பது குறித்து இன்­ன­மும் தெளி­வாக குழப்­ப­மான நிலையை சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­தும் நோக்­கி­லேயே அரச தலை­வர் இவ்­வாறு பதவி துறக்­க­வுள்­ளார் என்­றும் பேசப்­ப­டு­கி­றது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் பத­விக்­கா­லம் இந்த ஆண்டு நவம்­பர் மாதம் நிறை­வுக்கு வருகின்றது. 

அரச தலை­வர் தேர்­தலை இலக்­கு­வைத்து சிறீ­லங்கா பொது­மக்­கள் முன்­னணி மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி என்­பன பர­ப­ரப்­பாக இயங்கி வரு­கின்­றன.

எனி­னும், அரச தலை­வர் வேட்­பா­ளர் குறித்து அந்­தக் கட்­சி­க­ளுக்­குள் உறு­தி­யான நிலைப்­பாடு எட்டப்படவில்லை. 

இவ்­வா­றான நிலை­யி­லேயே அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது பத­வி­யைத் துறக்­கத் தீர்மானித்துள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கி­றது.

எதிர்­வ­ரும் திங்­கட்­கி­ழமை அவர் தனது பத­வி­யைத் துறக்­க­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அவ்­வாறு மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யைத் துறந்­தால் 

அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் சிறீ­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் வேட்­பா­ள­ராக அவரே கள­மி­றங்­கு­வ­தற்கு அதி­க­ள­வாக வாய்ப்­புக்­கள் உள்­ளன என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு தேர்­த­லுக்கு உத்­த­ர­வி­டப்­பட்டு தேர்­தல் பணியை, தேர்­தல்­கள் ஆணைக்­குழு ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக என்று மகிந்த தரப்­பின் முக்­கி­யஸ்­தர் ஒரு­வ­ரும் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­டம் கேட்­டுள்­ளார். 

அத்­து­டன் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வும் நேற்­றை­ய­தி­னம் தொடர் கலந்­து­ரை­யா­ட­லில் ஈடு­பட்­டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு