பொல்லார்ட் அதிரடி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி

ஆசிரியர் - Admin
பொல்லார்ட் அதிரடி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதலில் பொறுமையாக ஆடிய இருவரும் பின்னர் தங்களது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். குறிப்பாக, கெயில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் அவர் அரை சதமடித்து அசத்தினார்.

லோகேஷ் ராகுல் கெயிலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் 11 வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது.

சிறப்பாக ஆடிய கெயில் 36 பந்துகளில் 7 சிச்கர், 3 பவுண்டரியுடன் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய டேவிட் மில்லர் 7 ரன்னிலும், கருண் நாயர் 5 ரன்னிலும், சாம் குர்ரன் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

போட்டியின் தொடக்கம் முதல் நின்ற லோகேஷ் ராகுல் 63 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார். 

இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.  முதலில் களம் இறங்கிய டி காக் மற்றும் சித்தார்த் லாட் தங்களது ஆட்டத்தை நிதானமாக வெளிப்படுத்தினர்.  ஆட்டத்தின் 3.4 வது ஓவரில் அஸ்வின் பந்து வீச்சில் டி காக் 24 (23) ரன்கள் எடுத்திருந்த நிலையில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக லாட் 15 (13), சூர்ய குமார் யாதவ் 21 (15) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அடுத்து களம் இறங்கிய பொல்லார்ட் தனக்கான ஆட்டத்தில் திறமையை மைதானத்தின் அனைத்து பக்கங்களில் ரன்களை அடுத்து  விளாசினார்.  இவருடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் 7 (10), ஹர்திக் பாண்டியா 19 (13), குர்னால் பாண்டியா 1 (2) ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். அடுத்ததாக களம் இறங்கிய ஜோசப், பொல்லார்டுடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினர்.  மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட்  பஞ்சாப் அணி வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். 

இறுதியில் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை வெளிப்படுத்தியது மும்பை அணி.   ஆட்டத்தின் 19.2 ஓவரில் பொல்லார்ட் 31 பந்துகளை சந்தித்து 83 ரன்கள் எடுத்து அவுட்டானார்.  இறுதியில் மும்பை அணி ஆட்டத்தின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து தனது வெற்றியை பதிவு செய்தது. 

பஞ்சாப் அணி வீரர்கள் தரப்பில் முகமது சமி 3 விக்கெட்களும், அஸ்வின், சாம் கர்ரன், ராஜ்பூட் தலா 1 விக்கெட்களை பெற்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு