மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார் லசித் மலிங்கா

ஆசிரியர் - Admin
மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார் லசித் மலிங்கா

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். உள்ளூர் தொடரில் விளையாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை சென்றிருந்தார். 

இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி விட்டார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக ஆட்டத்தில் மலிங்காவுக்குப் பதிலாக அல்ஜாரி ஜோசப் இடம்பிடித்திருந்தார். இதில் அல்ஜாரி ஜோசப் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மும்பை வந்துள்ள மலிங்கா, இன்றைய போட்டி முடிந்த பின்னர் மீண்டும் இலங்கையில் நடக்க இருக்கும் நாளைய போட்டியில் பங்கேற்க விடியற்காலை மும்பையில் இருந்து புறப்படுவார் என்று தெரிகிறது.

Radio
×