சம்மந்தனுக்கு பதவி வழங்க ஜனாதிபதிக்கு விரும்பமில்லை..!

ஆசிரியர் - Editor I
சம்மந்தனுக்கு பதவி வழங்க ஜனாதிபதிக்கு விரும்பமில்லை..!

அரசியலமைப்பு சபையின் உறுப்பினா் பதவியிலிருந்து சமல் ராஜபக்ஸ விலகியுள்ள நிலையில் அந்த இடத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தனை அந்த பதவிக்கு நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா விருப்பமற்றிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

அரசியலமைப்பு சபைக்கு இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு, கடந்த 5 ஆம் திகதி சபாநாயகரும் அரசியலமைப்பு சபையின் தலைவர், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடந்த அரசியலமைப்பு சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவினால், இரா சம்பந்தனுக்கு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்த நியமனத்துக்கு, ஜனாதிபதியின் அங்கீகாரம் இன்னமும் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நியமனம் தொடர்பான பரிந்துரையைச் செய்வதற்காக, 

அரசியலமைப்பு சபை இந்த மாத இறுதியில் கூடவுள்ளது. இந்தநிலையில், இரா.சம்பந்தனின் நியமனத்துக்கான அங்கீகாரம் ஜனாதிபதியால் இன்னமும் வழங்கப்படாமல் இருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே, அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு