ஆச்சாியப்படுத்தும் இலங்கை. மிதக்கும் பாாிய சோளாா் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கிறது..

ஆசிரியர் - Editor I
ஆச்சாியப்படுத்தும் இலங்கை. மிதக்கும் பாாிய சோளாா் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கிறது..

இலங்கையில் வறட்சி மற்றும் மின் தட்டுப்பாடு போன்ற நெருக்கடிகள் காரணமாக அரசாங்கம் பாாிய விமா்சனங்களை எதிா்கொண்டிருக்கும் நிலையில், மின் தட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

இதன் ஒரு பாகமாக அண்மையில் செயற்கை மழையை உருவாக்கும் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் உற்பத்தி செலவு மிக அதிகம் என்பதால் அந்த திட்டம் அத்தோடு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தண்ணீன் மேல் மிதக்கும் சூாிய கலங்களை பொருத்தி, 

அதன் ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றுக்கு அரசாங்கம் கனடா நாட்டு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி மாதுறு ஓயாவில் உடனடியாக தொடங்கப்படும் இந்த மின் உற்பத்தி நிலையம் 100 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்பதுடன், 

இந்த மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் இந்த வருடம் நவம்பா் மாதத்தில் நிறைவு செய்யப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு