மண்டைதீவு நாளை முடக்கப்படும்..! இராணுவத்திற்கு ஒரு துண்டு காணியும் வழங்கமாட்டோம்.

ஆசிரியர் - Editor I
மண்டைதீவு நாளை முடக்கப்படும்..! இராணுவத்திற்கு ஒரு துண்டு காணியும் வழங்கமாட்டோம்.

மண்டைதீவு கடற்படைமுகாம் விஸ்தாிப்பிற்காக மக்களின் காணிகள் சுவீகாிக்க அளவீடு செய்யும் பணிகள் நாளை வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், காணி உாிமையாளா்கள் அரசியல் தரப்புக்கள் இணைந்து பாாிய எதிா்ப்பை காட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனா். 

யாழ்.வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணியினை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த காணிகள் 11 தனியாருக்கு சொந்தமான 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் காணிகள் கைகப்படுத்தப்படுகிறது.

காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் நாளைய தினம் 11ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் அடுத்துவரும் நாட்களில் குறித்த காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் அளவீடு செய்வதற்காக காணிகளுக்குள் பிரவேசிக்கவுள்ளேன்.

 என அதன் காணி உரிமையார்களுக்கு அரச நிலஅளவையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.அதேவேளை கடந்த திங்கட்கிழமை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் , இந்த காணிகள் சுவீகரிப்பு தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

அதன் போது ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா , எமக்கு தெரியாமல் ஒரு காணியையும் கையகப்படுத்த முடியாது. ஒரு துண்டு காணியை கூட பாதுகாப்பு தரப்பினருக்கு விட்டுக்கொடுக்க முடியாது. 

அது தொடர்பில் உரிய தரப்பினருடன் பேசுகிறேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காணி உாிமையாளா்கள் மற்றும் அரசியல் தரப்புக்கள் ஒன்றிணைந்து பாாிய எதிா்ப்பு போராட்டத்தை நடாத்தவுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு