SuperTopAds

1703.88 ஹெக்டயா் நிலத்தில் பாாிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம். பூநகாி மக்களிடம் தீா்மானிக்கும் சக்தி..

ஆசிரியர் - Editor I
1703.88 ஹெக்டயா் நிலத்தில் பாாிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம். பூநகாி மக்களிடம் தீா்மானிக்கும் சக்தி..

பூநகாி- கௌதாாி முனை பகுதியில் பாாிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பது தொடா்பாக பூரண ஆய்வுகள் நடாத்தப்படவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா். 

கௌதாரி முனை பிரதேசத்தில் காற்றலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவது தொடர்பாக மக்களின் கருத்தறியும் கலந்துரையாடல் நேற்று பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட கௌதாரி முனை பகுதியில் 1703.88 ஹெக்டேயர் நிலப்பரப்பில் காற்றலை நிலையங்களை நிறுவி மின் உற்பத்தி செய்வது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், அதிக மக்கள் வாழும் இந்த பிரதேசத்தில் மீன்பிடித்தொழிலாளர்கள், விவசாயிகள் என பலதரப்பட்டவர்கள் இருக்கின்றார்கள்.

மக்களின் வாழ்க்கை முறைகளில் இதனால் பாதிப்புக்கள் எற்படும் என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

இதனால் சூழல் பற்றியதும் சமூக தாக்கங்கள் பற்றியதும் விரிவாக ஆராயப்பட்டு இதன் சாதக, பாதக தன்மைகள் பற்றி பல்வேறு மட்டங்களில் ஆராயப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.