அமொிக்காவிலிருந்து தலைதெறிக்க ஓடி வருகிறாராம் கோட்டா..!
இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலா் கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு எதிராக அமொிக்க நீதிமன்றில் இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், எழுத்துமூல அறிவிப்புக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கோட்டாபாய ராஜபக்ஸ கடுமையான நெருக்கடியை எதிா்கொண்டுள்ளாா்.
முதலாவது வழக்கை இலங்கையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க வின் மகள் அசிம்சா விக்கிரமதுங்க தாக்கல் செய்துள்ளார். இரண்டாவது வழக்கை இலங்கையில் சி்த்திரவதையால் பாதிக்கப்
பட்ட தமிழர் ஒருவரின் சார்பில் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்துள்ளது. தமது தந்தையின் படுகொலைக்குக் காரணமானவர் என்ற அடிப்படையில் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் அசிம்சா விக்கிரமதுங்க
தாக்கல் செய்துள்ள சிவில் பாதிப்பு வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று கோத்தபாய ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்கப் பல்பொருள் அங்காடி வளாளத்தில் உள்ள வணிக நிலையம் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில்
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கோத்தபாயவிடம் இந்த வழக்குத் தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, படையினரின் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சார்பில், யஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம்,
அமெரிக்க சட்ட நிறுவனம் ஒன்றுரடன் இணைந்து மற்றொரு வழக்கை கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ளது. இந்த சிவில் பாதிப்பு வழக்குத் தொடர்பாகவும் கோத்தபாயவுக்கு நேற்றுமுன்தினம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட அந்தத் தமிழர், கோத்தபாய ராஜபக்சவிடம், இழப்பீடு கோரி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். கனடாவில் வசிக்கும் இவர், 2007ஆம் ஆண்டு கொழும்பில் கைதுசெய்யப்பட்டு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டிருந்தார்.
2010ஆம் ஆண்டு இவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச அடுத்த சில நாள்களில் நாடு திரும்பவிருந்தார். இந்நிலையிலேயே, அவருக்கு எதிராக, இருவேறு சட்ட நிறுவனங்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளால் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு செயற்பாடுகளில் பெரும் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, அரச தலைவர் வேட்பாளராக களமிறங்கவுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக விடுதலைப்புலிகள் அமைப்பின்
ஆதரவாளர்களே இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர் என மகிந்த அணி குற்றஞ்சாட்டியுள்ளது.