மக்கள் பணத்தில் விளம்பரம் செய்வதில்லை..! சீ.வி.கே.சிவஞானத்தின் வேட்டியை உருவ கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினா்கள் தீவிரம்..
கம்பரெலிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது அரசியல் பிரமுகா்களின் புகைப்படங்களுடன் கூடிய விளம்பர பதாகைகளை நாட்டுவதில்லை. என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீா்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி, பிரமர், குறிப்பிட்ட அமைச்சர், அந்த பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்களுடன் விளம்பர பதாகைகள் காட்சிப்படுத்தப்படுகின்றது. குறிப்பிட்ட திட்டத்திற்கான அபிவிருத்தி நிதியிலிருந்தே விளம்பர பதாகை பணமும் பெறப்படுகிறது.
இது தொடர்பான கடுமையான விமர்சனங்கள் பல்வேறு மட்டத்திலும் இருந்து வருகிறது. இந்த நிலையில், வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ் மாவட்ட செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
அதில்- பொதுநிதியை விரயம் செய்து, சுயவிளம்பரம் செய்வது தவறு என சுட்டிக்காட்டியிருந்தார். இந்த விவகாரம் இன்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டவர்களின் கருத்துக்களையும் மேற்கோள்காட்டி,
விளம்பர பதாகை தேவையற்றது என பலர் குறிப்பிட்டனர். இதையடுத்து, இனிமேல் கம்பெரலிய திட்டத்தில் விளம்பர பதாகை வைப்பதென தீர்மானிக்கப்பட்டது.