SuperTopAds

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த வேலையும் செய்யவில்லை- கலாநிதி ஹக்கீம் செரீப்

ஆசிரியர் - Editor III
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த வேலையும் செய்யவில்லை- கலாநிதி ஹக்கீம் செரீப்

கிழக்கு மாகாணத்தில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த வேலையும்  செய்யவில்லை- கலாநிதி ஹக்கீம் செரீப்

பணத்துக்காகவும் பதவிக்காகவும் பல ஏஜன்டுகளை வைத்துக்கொண்டு தற்போது நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்ற ஒரு கட்சி தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எனவும் கண்டி அக்குறனை பகுதிகளுக்கு  செய்தது போன்று கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு பகுதிகளுக்கும்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ந்த வேலையும்  செய்யவில்லை.ஆனால் எமது தாய்மார்களின் உரிமைக் குரலை காட்டுவதற்கும் எமது இளைஞர் யுவதிகளின்  வேலை வாய்ப்பினையும்  உறுதி செய்வதற்கும் உருவாக்கப்பட்ட கட்சிதான் எமது  ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியாகும்.எனவே அனைவரும் சற்று சிந்திக்க வேண்டும் என   ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் உப தலைவர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் செரீப் தெரிவித்தார்.

ஐக்கிய சமாதான கூட்டமைப்புக் கட்சியின் 2025 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபையில்  மாவடிப்பள்ளி  வட்டாரம் சார்பாக போட்டியிடும் ஏ.எல்.அன்பரின்   அரசியல் பணிமனை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்த கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அங்கு உரையாற்றிய ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் தொழிலதிபர்  கலாநிதி ஹக்கீம் செரீப்

காரைதீவு பிரதேச சபை எமக்கு ஒரு கன்னித் தேர்தல்.ஆனால் எமது கட்சியானத  பழைய கட்சியாகும்.தேசிய மக்கள் சக்தி போன்று  இன்று வந்த  கட்சி அல்ல.

தாய்மார்கள் நோன்பு நோற்று உருவாக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து எமது கட்சி உருவானது.மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப்  அவர்கள் மரணித்ததன் பின்னர்   தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உள்ள தலைவர் 25 வருடங்களாக இருந்தும் கூட யுவதகள்  இளைஞர்களுக்கு ஏதாவது வேலை வாய்ப்பு கொடுத்தாரா.உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.இல்லை.ஆனால் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப்  அவர்கள் மரணித்த  பிற்பாடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிழக்கு மாகாண மக்களுக்கு எதுவும் செய்யவில்லை இதுதான் உண்மை.

கண்டி அக்குறனை பகுதிகளுக்கு  செய்தது போன்று கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு பகுதிகளுக்கும்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ந்த வேலையும்  செய்யவில்லை.ஆனால் எமது தாய்மார்களின் உரிமைக் குரலை காட்டுவதற்கும் எமது இளைஞர் யுவதிகளின்  வேலை வாய்ப்பினையும்  உறுதி செய்வதற்கும் உருவாக்கப்பட்ட கட்சிதான் எமது  ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியாகும்.எனவே அனைவரும் சற்று சிந்திக்க வேண்டும்.

நாங்கள் கடந்த காலத்தில் வளர்த்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இந்த மாவட்டத்தில் தற்போது இல்லை.பணத்துக்காகவும் பதவிக்காகவும் பல ஏஜன்டுகளை வைத்துக்கொண்டு தற்போது நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்ற ஒரு கட்சி தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி.1987 ஆம் ஆண்டு நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப்    தலைவருடன் தோளோடு தோள் நின்றவன்.இந்த கட்சியில் தற்போது உள்ளவர்கள் நேற்று வந்தவர்கள்.தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் இருந்து செயல்பட முடியாது என தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்கள் கட்சியில் இருந்து விலகிப் போனார்.அதே போன்று கட்சியின் தவிசாளரும் அந்த கட்சியில் இருந்து விலகிச் சென்றார்.அதே போன்று நாங்களும் அக்கட்சியில் இருந்து வெளியேறி விட்டோம்.அதன் பின்னர் உருவாக்கப்பட்ட கட்சிதான் ஆக்கிய சமாதான கூட்டமைப்பு.இம்முறை இத்தேர்தலில் வண்ணத்துப்பூச்சி சின்னத்தில் களமிறங்கி இருக்கின்றோம்.

இங்கு தேர்தல் காலத்தில் வருகின்றவர்கள் தையல் மெஷின் தருகின்றோம் காசு தருகின்றோம் என்று வருகின்றார்கள்.நாங்கள் கைத்தொழில் பேட்டையை  ஆரம்பித்து  நிதியை கொண்டு இங்குள்ளவர்களுக்கு  வேலைவாய்ப்பு  கொடுப்போம். எனவே அனைவரும் சிந்தித்துப் பாருங்கள். இங்கு தேர்தலுக்காக வருபவர்கள் அனைவரும் பொய் பேசுகின்றவர்கள்.இவ்வளவு காலமும் வாக்குகளை நீங்கள் ஒவ்வொரு தேர்தலிலும்  செலுத்தி  என்ன விடயங்களை சாதித்து இருக்கிறீர்கள்.ஒன்றுமே இல்லை.

ஆனால் இன்றும்   வருவார்கள் உங்களுடன் பேசுவார்கள் அரிசி மூடைகளை தருவார்கள். சில பொருட்களை வழங்குவார்கள் இதற்கு எல்லாம் சோரம் போய்விடாமல் 

 உங்களது பிள்ளைகளைப் பற்றி யோசிக்க வேண்டும். நாம் மரணித்து விடுவோம்.எதிர்காலத்தில்  வாழ வேண்டிய பிள்ளைகள் அவர்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும்.  அதற்காக  சிந்தித்து உங்கள் வாக்குகளை வண்ணத்துப்பூச்சி சின்னத்துக்கு வழங்க  தயாராகுங்கள்.

 இதன் பிற்பாடு இன்னும் ஒரு கட்சி இத்தேர்தல் காலத்தில் வரும். நாங்கள் அதைத் தருகின்றோம் இதை தருகின்றோம் என்று சொல்வார்கள் அதற்கு சோரம் போக வேண்டாம் உங்கள் உரிமைகளை கேளுங்கள் எங்களுக்கு பணம் தேவை இல்லை. என்ன செய்யப் போகின்றீர்கள்? என்னுடைய மகனுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என்னுடைய மகளுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என கெளுங்கள்.தற்போது ஆட்சியில்  இருக்கின்ற  கட்சியினால்  ஒன்றும் நடக்கப் போவதில்லை. ஆகவே நீங்கள் அனைவரும் உங்கள் மனதில் கையை வைத்து வருகின்ற தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்புக்கு வாக்களித்து  உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக   அனைவரும் பங்காளி ஆகுங்கள்   என்றார்.