SuperTopAds

இலங்கையின் குறுக்காக 400 கிலோ மீற்றா் துாரம் அசாத்தியமாக பறந்து சாதனை படைத்த யாழ்ப்பாண புறாக்கள்.. பாிசுகளை அள்ளின.

ஆசிரியர் - Editor I
இலங்கையின் குறுக்காக 400 கிலோ மீற்றா் துாரம் அசாத்தியமாக பறந்து சாதனை படைத்த யாழ்ப்பாண புறாக்கள்.. பாிசுகளை அள்ளின.

இலங்கையின் அந்தமான மாத்தறை- டொந்தர பகுதியிலிருந்து நெட்டாங்காக சுமாா் 400 கிலோ மீற்றா் வான் பரப்பை அசாத்தியமாக கடந்து யாழ்ப்பாணத்தை சோ்ந்த பந்தைய புறாக்கள் சாதனை பாிந்துள்ளன. 

ட்ராகன் மவுத், டொந்­தர என்ற இடத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்ட பந்­த­யப் புறாக்­கள் பிற்­ப­க­லில் யாழ்ப்பாணத்தை அடைந்து இந்­தச் சாத­னை­யைப் புரிந்­தன என்று பபு­கயா அறி­வித்­துள்­ளது.

பந்­த­யப் புறாக்­கள் கழ­கம் – யாழ்ப்­பா­ணம் (பபு­கயா) 2 வரு­டங்­க­ளாக புறாப் பந்­த­யங்­களை ஒழுங்கு செய்து நடத்தி வரு­கி­றது. இலங்­கை­யின் மிகக் கூடிய தூரப் போட்­டி­யான “ட்ராகன் மவுத்” நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை நடத்­தப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணத்­தின் பிர­பல மகப்­பேற்று மருத்­து­வ­ரும் புறா ஆர்­வ­ல­ரு­மான மருத்­துவ நிபு­ணர் கே.சுரேஸ்குமாரின் அனு­ச­ர­ணை­யோடு இந்­தப் போட்டி மிகப் பிரம்­மாண்­ட­மாக நடத்­தப்­பட்­டது என்­கின்­ற­னர் பபு­கயா நிர்­வா­கி­கள்.

யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து தரைப் பாதை வழி­யாக சுமார் 600 கிலோ மீற்­றர்­கள் தூரத்­தில் இருக்­கி­றது ட்ராகன் மவுத். அதுவே இலங்­கை­யின் அந்­தம். யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து எடுத்­துச் செல்­லப்­பட்ட சுமார் 100 வரை­யான புறாக்­கள் அந்த இடத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டன.

எட்­டரை மணி நேரத்­தில் பறந்து முதல் புறா யாழ்ப்­பா­ணத்தை அடைந்து சாதனை படைத்­தது. சிறிய நேர இடை­வெ­ளி­க­ளில் ஏனைய புறாக்­க­ளும் ஒவ்­வொன்­றாக வந்து சேர்ந்­தன. வெற்­றி­பெற்ற புறா­வுக்கு ஒரு லட்­சம் ரூபா பணப் பரி­சும் பதக்­கம், வெற்­றிக் கோப்பை என்­ப­ன­வும் வழங்­கப்­ப­டு­கின்­றன. 

இரண்­டாம் இடத்­திற்கு 75 ஆயி­ரம் ரூபா­வும் மூன்­றாம் இடத்­திற்கு 50 ஆயி­ரம் ரூபா­வும் ஏனைய 7 புறாக்களுக்கும் தலா 10 ஆயி­ரம் ரூபா­வும் பரி­சு­க­ளாக வழங்­கப்­ப­டு­கின்­றன.

இலங்­கை­யில் இது­வ­ரை­யில் ஆகக் கூடு­த­லாக 300 கிலோ­மீற்­றர்­கள் வரை­யான பந்­த­யங்­களே இடம்பெற்றுள்ளன. இப்­போ­து­தான் முதற்­ற­ட­வை­யாக 400 கிலோ மீற்­றர்­கள் போட்டி நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என்­கி­றது பபு­கயா.